For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டெண்டர் ஊழல்.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு..!! - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி..!!

07:32 PM Sep 18, 2024 IST | Mari Thangam
டெண்டர் ஊழல்   முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு       லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
Advertisement

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 மீது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகளை சீரமைக்க, 300 கொடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290 கோடி ரூபாய் மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி , அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் எஸ்.பி வேலுமணி மற்றும், சென்னை மாநகராட்சி சேர்ந்த 10 பொறியாளர்கள் மீது ரூ. 26.61 கோடி முறைகேடு செய்ததாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more ; ‘கோவில் ஒன்றும் கேக் வெட்டும் இடம் அல்ல..!!’ – குருவாயூர் கோவிலில் ரகளையில் ஈடுபட்ட முஸ்லீம் பெண்..!! – கேரள நீதிமன்றம் அதிரடி

Tags :
Advertisement