For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"Search பண்றது இனிமே ஈஸி.."!ஜெனரேட்டிவ் 'AI' அம்சங்களுடன் 'GOOGLE MAPS'! இவற்றின் ஸ்மார்ட் அம்சங்கள் என்ன.? விரிவான தகவல்கள்.!

04:19 PM Feb 03, 2024 IST | 1newsnationuser7
 search பண்றது இனிமே ஈஸி    ஜெனரேட்டிவ்  ai  அம்சங்களுடன்  google maps   இவற்றின் ஸ்மார்ட் அம்சங்கள் என்ன   விரிவான தகவல்கள்
Advertisement

ஓபன்'AI' மற்றும் மெட்டாவுடன் இணைந்து உருவாக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூகுள்'AI' கருவிகளின் பயன்பாட்டை மேப்ஸ் செயலிலும் விரிவு படுத்துகிறது. மேலும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக பார்ட், ஜெமினி நானோவால் இயக்கப்படும் பிக்சல் அம்சங்கள் மற்றும் படத்தை உருவாக்க இமேஜென் 2 மாதிரி போன்ற ஜெனரேட்டிவ் 'AI' கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.

Advertisement

google நிறுவனம் ஜெனரேட்டிவ் 'AI' கருவிகளை பயன்படுத்தி தங்களது பயனாளர்களுக்கு தரமான லைப் ஸ்டைல் அம்சங்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த புதிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கருவிகளின் துணையுடன் 250 மில்லியன் இடங்கள் மற்றும் 300 மில்லியன் பங்களிப்பாளர்களின் கருத்துக்கள் பகிரப்பட்ட பரந்த களஞ்சியத்திலிருந்து தரமான உணவு நிலையங்கள் பற்றிய தகவல்களை தேர்ந்தெடுத்து தங்களது பயனாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் இவை தவிர பிரத்தியேகமான லைப் ஸ்டைல் சேவைகளும் இதில் அடங்கும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருக்கும்போது அருகில் இருக்கும் விண்டேஜ் ஸ்டோர்கள் பற்றிய பரிந்துரைகளை கூகுள் மேப்ஸில் தேடுகிறீர்கள் என்றால் அவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டிவ் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் உங்களுக்கு நம்பகமான பரிந்துரைகளை வழங்குவதற்காக அருகில் இருக்கும் புகைப்படங்கள் கடைகளின் தகவல்கள் ஆகியவற்றை மதிப்பீடுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி உங்களுக்கு ஒவ்வொன்றாக வழங்கும். இதிலிருந்து உங்களுக்கு சிறந்தவற்றை நீங்கள் தேர்வு செய்வதற்கு எளிமையாக இருக்கும்.

தற்போது அமெரிக்காவில் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் இந்த சேவை விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஆட்டு பேசியல் இன்டெலிஜென்ஸ் கருவியின் செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடுகளை கூகுள் சேகரித்துக் கொண்டுள்ளது. கூகுள் மேப்ஸில் ஜெனரேட்டிவ் 'AI' இணைக்கப்பட்டு இருப்பதன் மூலம் ஒவ்வொரு பயனும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு தேவையான தனி பயனாக்கப்பட்ட ஆய்வு அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

Tags :
Advertisement