பர்ஸில் தவறுதலாக கூட இந்த பொருட்களை வைக்காதீங்க... ஒரு காசு கூட தங்காதாம்..!
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும், எவற்றை வைக்கக்கூடாது என்று பல விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டிற்கு மட்டுமின்றி நமது பர்ஸில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும். எவற்றை வைக்கக்கூடாது என்பது குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அந்த வகையில் பர்ஸில் சில பொருட்களை வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே பர்ஸில் இருந்து சில பொருட்களை எடுத்து விடுவது நல்லது. ஏனெனில் இந்த விஷயங்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பண தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எந்தெந்த பொருட்களை நம் பர்ஸில் வைக்கக் கூடாது என்று பார்க்கலாம்.
பெரியவர்களின் படம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, முன்னோர்களின் படத்தை பணப்பையில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. இதனால் பணம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே முன்னோர்களின் படத்தை பர்ஸில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.
கிழிந்த பர்ஸ் : பர்ஸ் கிழிந்து விட்டாலோ, அது பழையதாக மாறிவிட்டால் உடனே அதனை மாற்றிவிடுவது நல்லது. இதனால் வாழ்க்கையில் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், எந்த வகையான கடன், பில் பேப்பர்கள் மற்றும் வட்டி செலுத்தும் பொருட்களையும் பர்ஸில் வைத்திருக்க வேண்டாம். இப்படிச் செய்வதால் பண நஷ்டம் அதிகம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
கிழந்த நோட்டுகள்: கிழித்த ரூபாய் நோட்டை உங்கள் பர்ஸில் வைக்கவே கூடாது. வாஸ்து படி அப்படி செய்வது நல்லதல்ல. இதனால் லட்சுமி தேவி கோபமடைந்து, பெரும் பண இழப்பு ஏற்படுகிறது. மேலும் இப்படி செய்வதால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைகிறது என்றும் சொல்லப்படுகிறது.
சாவி : சாவியை ஒருபோதும் பர்ஸில் வைக்க வேண்டாம். வாஸ்து படி, இதைச் செய்வதன் மூலம் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்று நம்பப்படுகிறது..
கடவுள் போட்டோக்கள்: கடவுளின் படத்தை பர்ஸில் வைக்காதீர்கள், ஏனென்றால் நாம் பர்ஸை வெளியே எடுத்து செல்லும் போது, அழுக்கு கைகளால் அதனை தொடுகிறோம். அதில் இருந்து பணத்தை எடுக்கிறோம். இவ்வாறு செய்வதால் தெய்வங்கள் அவமதிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும் பர்ஸில் பணம் தங்காது எனவும் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நம்பப்படுகிறது.
Read More : வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இதை எல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டமாம்..! பண மழை தான்!