கூகுள் 'LUMIERE'..! வீடியோ உருவாக்கத்தில் புது புரட்சி.! ஒரு போட்டோவை, வீடியோவாக மாற்றலாம்..! மேலும் விவரம்…!
ஒவ்வொரு நாளும் தகவல் தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டே செல்கிறது . புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் வேலைகள் எளிமையாக்கப்படுவதோடு புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சிகளை ஏற்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்றவை தங்களது பயனர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
இன்றைய நவீன உலகில் 'AI' என்றழைக்கப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் மைல் கல்லாக பார்க்கப்படும் இந்த டெக்னாலஜியை ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது பயன்பாட்டிற்கு கருவியாக பயன்படுத்தி வருகிறது . மேலும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது சொந்த செயலிகளை உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் கூகுள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'LUMIERE' என்ற 'AI' வீடியோ எடிட்டரை உருவாக்கி இருக்கிறது. மேலும் பயனர்களின் வீடியோ உருவாக்கத்தில் பல புதுமைகளை புகுத்த இருக்கும் LUMIERE தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
உங்களின் வீடியோ உருவாக்கும் பணி மற்றும் வீடியோ தயாரிப்பு வேலைகளை கூகுளின் 'LUMIERE AI' மாடல் எளிதாக்குகிறது. இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் சில நிமிடங்களில் பல வீடியோக்களை உருவாக்க முடியும். LUMIERE செயலிக்கு சில அறிவுறுத்தல்களை கொடுத்தால் மட்டும் போதும். உங்களுக்கு தேவையான வீடியோவை சிறந்த தரத்தில் உருவாக்கித் தரும் வகையில் இந்த 'AI' மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
LUMIERE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெறும் வார்த்தைகளை உள்ளீடு செய்வதன் மூலம் அதற்கேற்ற வீடியோவை தயாரிக்க முடியும். மேலும் இந்த புதிய செயலியை பயன்படுத்தி எழுத்துக்களை வீடியோவாக மாற்ற முடியும். மேலும் புகைப்படங்களை முழு அளவிலான வீடியோவாக தயாரிக்கவும் இது உதவுகிறது. எழுத்துக்களின் மூலம் கட்டளைகளை கொடுக்க இந்த செயலி அதனை முழு அளவிலான வீடியோவாக மாற்றி தருகிறது. இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விளக்க வீடியோவையும் கூகுள் தனது 'X' வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறது.
கூகுளின் இந்த புதிய தொழில்நுட்பம் ஸ்பேஸ் டைம் யூ ஆர்க்கிடெக்சர் முறையில் இயக்கப்படுகிறது. எழுத்துக்களை கட்டளையாக கொடுப்பதன் மூலம் எளிதாக முழு அளவிலான வீடியோவை தயாரிக்க இந்த தகவல் தொழில்நுட்பம் உதவுகிறது. உதாரணமாக ஒரு குழந்தை ஓடுகிறது என்று நாம் எழுத்துக்களின் மூலம் கட்டளை கொடுப்பதை வைத்து குழந்தை ஓடுவது போன்ற முழு அளவிலான வீடியோவை உருவாக்கித் தருகிறது. வீடியோ எடிட்டிங் மற்றும் வீடியோ மேக்கிங் துறையில் இது புதிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் சிறிய அளவிலான எளிய வீடியோக்களை உருவாக்குவதற்கு மட்டும் பயன்படாமல் தொழில்முறை வீடியோ எடிட்டிங் மற்றும் வீடியோ மேக்கிங் வேலைகளில் பயன்படுத்தக்கூடிய அத்தனை தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது. மழை பெய்வது போன்ற எஃபெக்ட் மற்றும் காற்றில் மரங்கள் அசைவது எஃபெக்ட் ஆகியவற்றையும் எழுத்துக்களின் மூலம் உள்ளீடு செய்வதிலிருந்து முழு அளவிலான வீடியோவை பெற முடியும். இந்த புதிய தொழில்நுட்பம் திரைப்படத் துறை மற்றும் வீடியோ எடிட்டிங் இல் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.