விடைபெற்றது வடகிழக்கு பருவமழை!… வானிலை மையம் அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வட மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்டது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து மக்களை வாட்டி வதைத்தது. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து நேற்று விலகியதாக தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வரும் 18ம் தேதிமுதல் 20ம் தேதிவரை தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.