குட் நியூஸ்..!! மதியத்திற்கு மேல் இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!
02:56 PM Jan 09, 2024 IST | 1newsnationuser6
Advertisement
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களிலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.