குட்நியூஸ்!. மின்சாரச் செலவை குறைக்க புதிய திட்டம்!. ரூ.78,000 தமிழக அரசு மானியம்!
Electricity: தமிழக அரசு அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும், மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கிறது. இதற்கிடையில், மின்சாரச் செலவை மேலும் குறைக்கவும், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் நோக்கில், “மேற்கூரை சோலார் பேனல்” என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், வீடுகளில் சோலார் பேனல் அமைக்க விரும்புபவர்களுக்கு மானியமாக ஒரு சில தொகைகள் வழங்கப்படும். உதாரணமாக, 1 கிலோ வாட் சோலார் பேனலுக்கு ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.50,000, 3 கிலோ வாட்டிற்கு ரூ.78,000 என அரசு மானியம் வழங்குகிறது. இந்த சோலார் பேனல் மூலம் பெறப்படும் மின்சாரம் வீடுகளில் பயன்படுத்துவதற்கும், ஏதாவது மின்சாரத் தட்டுப்பாடு நேரிட்டாலும் உபயோகப்படுத்தும் வகையில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இது குறிப்பாக வெயில் காலங்களில் அதிகம் பயன்படும் மற்றும் மலை காலங்களில் கூட சோலார் பேனலின் மின்சார உற்பத்தி மூலம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அரசு இணையதளமான https://www.pmsuryaghar.gov.in அல்லது https://www.tnebltd.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
Readmore: இன்று இந்த 9 மாவட்டத்தில் கனமழை…!