புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்துள்ள உங்களுக்கு செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன. இதற்கிடையே, மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர், மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடைபெற்றது.
தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளன. இவர்களுக்கு பல மாதங்களாக கார்டுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், சிலருக்கு உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஒப்புதல் ஆகிவிட்டது என்ற குறுஞ்செய்தி வந்தது. அவர்களுக்கு கார்டுகள் வழங்கும் சூழ்நிலையில், மக்களவை தேர்தல் தொடங்கி விட்டது. எனவே, அவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, தேர்தல் நடைமுறைகள் ஜூன் மாதம் 5ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பு அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் பணிகள் நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன் மூலம் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும் பலன் கிடைக்கும். இதற்கிடையே, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடப்பதாக இருந்தால், அந்த மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். அதேபோல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Read More : நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! பதிவிறக்கம் செய்வது எப்படி..?