முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகத்திற்கு குட் நியூஸ்... வரி பகிர்வு ரூ.7057.89 கோடி வழங்க ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு...!

Good news for Tamil Nadu... The Central Government has approved a tax sharing of Rs. 7057.89 crore.
05:45 AM Jan 11, 2025 IST | Vignesh
Advertisement

மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.7057.89 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு இந்த வரி பகிர்வை மத்திய அரசு இம்மாதம் வழங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தம் ரூ.1,73,030 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி கடந்த டிசம்பரில் ரூ.89,086 கோடியாக இருந்தது.

தமிழகத்திற்கு வரிப்பகிர்வாக ரூ. 7057.89 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஆந்திராவுக்கு ரூ.7002 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.6,310 கோடியும், கேரளாவுக்கு ரூ.3,330 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.13,583 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.10,930 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.7834 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ. 10,427 கோடியும், உத்தர பிரதேசத்துக்கு ரூ.31,039 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.13,017 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
central govtnirmala sitaramanTaxtn governmentதமிழ்நாடுமத்திய அரசு
Advertisement
Next Article