ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசின் இந்த சூப்பரான அறிவிப்பை கவனிச்சீங்களா..?
நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகரங்களில் யுபிஐ வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகள் அதிகரித்ததன் காரணமாக, நேரடி வங்கி சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம், இணைய சேவை பெரிதும் இல்லாத கிராமங்களில் உள்ள மக்கள், வங்கி சேவையை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் காரணமாக டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சியை ஒரு புறம் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
குக்கிராமங்களில் வங்கி சேவைகள் சரிவர இல்லாததால், அரசின் உதவித்தொகைகளை பெறுவோர் தங்கள் பணத்தை பெற சில கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு ரேசன் கடைகள் மூலம் வங்கி சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தபால்துறை மூலம் வங்கி சேவை, ஆதார் போன்றவை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த திட்டம் குக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, ரேஷன் கடைகளில் மினி ஏடிஎம்களை நிறுவும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஏடிஎம்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கூடிய டிஜிட்டல் கருவிகளை கொண்டிருப்பதால், கோர் பேங்கிங் சேவைகளை வழங்கும். முதற்கட்டமாக ஏடிஎம் அமைக்க சாத்தியமுள்ள கடைகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மிஷின் மூலம் 10,000 முதல் 20,000 வரை பெற முடியும் என்று கூறப்படுகிறது.
ஏடிஎம்-கள் அமைந்துள்ள பகுதியில் வங்கியின் ஊழியர் ஒருவர் உதவியாளராக அமர்த்தப்பட்டிருப்பார். இதன் மூலம் முதியோர்கள் சரியான வழிகாட்டுதல் மூலம் பணம் பெற முடியும் என்று கூறப்படுகிறது. பேரிடர் காலங்களில் உதவித்தொகையும், பொங்கல் பரிசுத் தொகையும் ரேசன் கடைகள் மூலம் வழங்கபட்டதால், இந்த முயற்சியும் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இனி முதியோர்கள் பணம் பெற வங்கிக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை, இனி ரேஷன் கடைகளில் பணம் பெற்றுக்கொள்ளலாம்.
Read More : பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி..!! அறிவிக்கப்பட்ட தேசிய விருதை ரத்து செய்வதாக அறிவிப்பு..!!