லாரி ஒட்டுநர்களுக்கு குட்நியூஸ்!… இருக்கையில் ஏசி கட்டாயம்!… மத்திய அரசு அறிவிப்பு!
2025 அக்டோபர் 1 முதல் லாரி ஓட்டுநர்களின் இருக்கையில் ஏசி வசதியை கட்டாயமாக்கி மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வௌியாகி உள்ளது.
சரக்கு லாரி ஓட்டுநர்களின் கேபின் குளிரூட்டப்படுவது கட்டாயமாக்கப்படும் என மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜுலை மாதம் தெரிவித்திருந்தார். இதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் ஏற்படும். குளிரூட்டப்பட்ட கேபின் வைக்க அதிகம் செலவாகும் என்பதால் லாரிகளின் விலையும் அதிகரிக்கும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் லாரி ஓட்டுநர்களின் கேபின் குளிரூட்டப்படுவது கட்டாயமாக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் அரசிதழில், “2025 அக்டோபர் 1 அன்று அல்லது அதற்கு பிறகு தயாரிக்கப்படும் என்2, என்3 வகைகளை சேர்ந்த அனைத்து புதிய லாரிகளிலும் ஓட்டுநர்களுக்கு குளிரூட்டப்பட்ட கேபின் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.