உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா..? இனி ஈசியா கண்டுபிடிக்கலாம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
தொலைந்து போகும் அல்லது திருட்டு போகும் செல்போன்களை கண்டுபிடிக்க இதுவரை அதன் சிம் கார்டுகள் முடக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது. தற்போது தொலைந்து போகும் செல்போன்களை கண்டறிய ஒரு இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.
ceir.sancharseathi.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தால், மத்திய சாதன அடையாள பதிவின் மூலமாக IMEI எண்ணை பயன்படுத்தி தொலைந்த செல்போனை 24 மணி நேரத்தில் முடக்கலாம். யார் பெயரில் எத்தனை செல்போன்கள், சிம்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறித்து இந்த இணையதளம் வாயிலாக அறியலாம். அதாவது, 24 மணிநேரத்தில் முடக்கப்பட்ட செல்போனில் புதிய செல்போன் எண்ணை பதிவு செய்யும்போது சம்பந்தபட்ட செல்போன் தொலைத்தவர் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு குறுஞ்செய்தி செல்லும்.
அதே குறுஞ்செய்தி செல்போனை தொலைத்தவர்கள் புகார் அளித்தால் காவல்நிலையத்திற்கும் செல்லும். மேலும், இந்த இணையதளத்தின் மூலம் இது எவ்வளவு பழமையான செல்போன் என்பது குறித்து ஐஎம்இஐ நம்பர் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தொலை தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்த இணையதளத்தை பயன்படுத்துவதற்கான லாக் இன் ஐடிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.