முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்தது..? நிலவரம் இதோ..!!

The prices of various vegetables have come down significantly compared to last week due to the increase in arrivals at the Koyambedu vegetable market in Chennai.
03:31 PM Jun 27, 2024 IST | Chella
Advertisement

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரத்துடன் ஓப்பிடுகையில் பல்வேறு காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

Advertisement

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவால் கடந்த வாரம் தக்காளி, வெங்காயம், பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்தது. தக்காளி விலை சில்லறை விற்பனையில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

இந்நிலையில், தற்போது வரத்து அதிகரித்திருப்பதால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. தக்காளி கடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.70 வரை போனது. இன்று அதன் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. இதே போல வெங்காயம், கேரட், பீட்ரூட், கோஸ், கத்தரிக்காய், உருளைக்கிழங்கின் விலையும் ரூ.50-க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.180 வரை விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது கிலோ ரூ.90ஆக குறைந்துள்ளது.

இதே போல ரூ.120-க்கு விற்பனையான அவரைக்காயும் ரூ.90 ஆக குறைந்துள்ளது. முருங்கைக்காய், குடைமிளகாய் ஆகியவற்றை விலையும் கிலோ ரூ.100-க்கும் கீழ் குறைந்துள்ளது. சுப நிகழ்ச்சிகள் குறைவாக இருப்பதால் காய்கறிகளின் தேவையும் குறைந்துள்ளது. இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் வரும் வாரங்களில் அதன் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : குட் நியூஸ்..!! மேலும் 1.48 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வரப்போகுது..!! சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

Tags :
காய்கறிகள்கோயம்பேடுவரத்து அதிகரிப்புவிலை குறைவு
Advertisement
Next Article