For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

NIA Raid | சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் NIA ரெய்டு!! திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

National Intelligence Agency officials have conducted raids in 12 places including Chennai to prevent terrorist incidents
09:13 AM Jun 30, 2024 IST | Mari Thangam
nia raid   சென்னை  திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் nia ரெய்டு   திடீர் சோதனைக்கு காரணம் என்ன
Advertisement

தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை,கும்பகோணம்,திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் என்ஐஏ இன்று காலை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளர்கள் வீடுகளில் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில், சென்னை, தஞ்சாவூர், ஈரோடு,புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பகுதியில் ஜேசிஸ் ஸ்கூல் அருகில்  ஷர்புதீன் என்பவர் வீட்டில் கொச்சி NIA ஆய்வாளர் விஜி என்பவர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீடு,  சென்னையில்  முகமது இஷாக் என்பவர் வீட்டில் சென்னை NIA ஆய்வாளர் அமுதா என்பவர் தலைமையில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

குழந்தையம்மாள் நகரில் அகமது என்பவர் வீட்டில் இன்று (ஜூன் 30) காலை 6 மணியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மூவரது வீட்டிலும் சோதனை நடைபெற இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து இடங்களில் இன்று காலை ஆறு மணி முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Read more ; இந்த பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காதீர்கள்.. தரித்திரம் தாண்டவம் ஆடும்!

Tags :
Advertisement