For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

agriculture: விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… ரூ.24,420 கோடி உர மானியமாக வழங்க மத்திய அரசு ஒப்புதல்!

06:20 AM Mar 01, 2024 IST | 1newsnationuser3
agriculture  விவசாயிகளுக்கு குட்நியூஸ் … ரூ 24 420 கோடி உர மானியமாக வழங்க மத்திய அரசு ஒப்புதல்
Advertisement

agriculture:

Advertisement

NBS திட்டத்தின் கீழ் காரீஃப் பருவம் 2024க்கான (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை) உரங்களுக்கு மத்திய அரசு 24,420 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். NBS திட்டத்தின் கீழ் காரீஃப் பருவம் 2024க்கான (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதன்படி, என்பிஎஸ் அடிப்படையிலான உரங்களுக்கு மத்திய அரசு 24,420 கோடி ரூபாய் மானியம் வழங்கும்.

கடந்த ஆண்டு விலையிலேயே விவசாயிகளுக்கு உரங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என கூறினார். இதுபோன்று, ரூ.75,021 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடு (சோலார் பேனல்) அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார். இந்த திட்டம் மூலம் ஒரு கோடி குடும்பங்கள் தலா 300 யூனிட் மின்சாரம் இலவசமாக பெறுவார்கள். பிப்ரவரி 13ம் தேதி பிரதமர் மோடியால் சூரிய மின்சக்தி திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து மத்திய அரசு கட்டிடங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கூரை சூரிய ஒளி மின்சாரம் பொருத்தப்படும் எனவும் கூறினார்.

மேலும், இந்தியாவில் தலைமையகத்துடன் சர்வதேச பிக் கேட் அலையன்ஸ் (ஐபிசிஏ) நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றும் 2027-28 வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பட்ஜெட் நிதி ரூ150 கோடிக்கு ஒப்புதல் அளித்தது எனவும் கூடுதலாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

Readmore:  இனி தேதி வாரியாக மெசேஜ்களை தேடும் வசதி .! மெட்டாவின் புதிய அப்டேட்.!

Tags :
Advertisement