சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.! ரூட்டை மாற்றிய மிக்ஜாம்.! வானிலை அறிக்கை அப்டேட் .!
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் நேரடியாக களத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புயலின் தீவிரம் கடுமையாக இருக்கும் என்ற நிலையில் தற்போது சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகி இருக்கிறது.
Please keep in mind, that the system is slowly moving toward the Nellore region, light to moderate rain will continue before it stops completely.
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) December 4, 2023
இது தொடர்பாக வானிலை ஆர்வலர் ராஜா ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் சென்னை புயல் குறித்த அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி சென்னையின் மையப்பகுதியில் மழைப்பொழிவு தற்போது வலுவிழந்து வருவதால் கனமழை படிப்படியாக குறையும் மேலும் புறநகர் பகுதிகளிலும் தற்போது பெய்து கொண்டிருக்கும் மலையின் அளவு குறையும் என தெரிவித்துள்ளார். புயல் சென்னையின் கடற்கரை அருகே மையம் கொண்டிருப்பதால் பலத்த காற்று வீசலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
எனினும் தமிழகத்தின் பகுதிகளில் இருந்த புயல் தற்போது வலுவிழந்து நெல்லூரை நோக்கி செல்கிறது. அதனால் புயல் முழுவதுமாக கரையை கடக்கும் வரை லேசானது முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் சென்னைக்கு இனி கனமழை இருக்காது என்ற குட் நியூஸ் பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.