மக்களே குட் நியூஸ்..!! ரேஷன் அட்டையில் பெயர் இல்லையென்றாலும் பொருட்கள் கிடைக்கும்..!!
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகவும் தவித்து வந்தனர். இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் மக்களுக்கு அவர்களின் ரேஷன் அட்டைக்கு வழங்கப்படும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட கூடுதலாக இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை நாடு முழுவதும் உள்ள 80 கோடி பேருக்கும் மேலானோருக்கு ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தகுதியில்லாத ரேஷன் கார்டு பயனாளிகளின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இதனால் பலருடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை இல்லை என்றாலும் பல்வேறு மாநிலங்களில் இந்த விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்களுடைய ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயரையும் நீக்கியிருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். கோதுமை, அரிசி, தானியங்கள் போன்ற ரேஷன் உதவிகள் இனி உங்களுக்கும் கிடைக்கும். சில காரணங்களால் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் மத்திய அரசின் ரேஷன் கார்டு பட்டியலில் உங்கள் பெயர் விரைவில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அருகில் உள்ள உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு சென்று ரேஷன் அட்டைதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் உங்களது பெயர் ரேஷன் அட்டையில் சேர்க்கப்படும்.
Read More : இரண்டில் ஒன்று இருக்காது!… தேர்தலுக்குபின் அது நிச்சயம் நடக்கும்!… அதிமுக குறித்து அண்ணாமலை சாடல்!