Gold Rate : உச்சம் தொட்ட தங்கம் விலை.. மீண்டும் 58 ஆயிரத்தை கடந்தது..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா?
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அண்மைக் காலமாகவே தங்கத்தின் விலை ஏற்றமும், தாழ்வுமாக இருந்து வருகிறது. இஸ்ரேல் – காஸா போர், இஸ்ரேல் – ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் விலை ரூ.60,000-ஐ நெருங்கி விற்பனையானது.
இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 11) சற்று அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 7ஆயிரத்து 205 ரூபாயாகவும், ஒரு சவரன் 57ஆயிரத்து 540 ரூபாய்க்கு வி்ற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.7, 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து 58,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read more ; தமிழகத்திற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்.. கொட்டப்போகுது கனமழை..!! – வானிலை ஆய்வு மையம் அலர்ட்