Gold Rate | செம குட் நியூஸ்..!! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக தங்கம் விலை உச்சத்தை எட்டியது. கடந்த ஜூலையில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்பட்டது.
ஆனால், தற்போது இஸ்ரேல் லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றம் சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. முதலீட்டார்கள் அதிகம் தங்கத்தை வாங்கி வருவதால், அதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று சற்று குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
அந்த வகையில், இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 59,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,385-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 குறைந்து ரூ. 106-க்கும், ஒரு கிலோ ரூ. 1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read More : இதயநோய், சர்க்கரை நோய், மனநல பிரச்சனைகளுக்கு சூப்பர் தீர்வு..!! தினமும் இதை டிரை பண்ணுங்க..!!