முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடர்ந்து உயரும் தங்கம் விலை..!! கவலையில் நகைப்பிரியர்கள்..!! இன்றைய நிலவரம் இதுதான்..!!

10:28 AM Dec 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

அந்தவகையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,795 ரூபாயாகவும், சவரனுக்கு 46,360 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் 5,835 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 46,680 ரூபாயாகவும் விற்பனையாகிறது. அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 6,305 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, 50,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 80.20 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 80,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ஆபரணத் தங்கம்தங்கம் விலைநகைப்பிரியர்கள்வெள்ளி விலை
Advertisement
Next Article