For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை... அதுவும் இவ்வளவா..? நகைப்பிரியர்கள் ஷாக்..

10:03 AM Jan 03, 2025 IST | Rupa
ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை    அதுவும் இவ்வளவா    நகைப்பிரியர்கள் ஷாக்
Advertisement

இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

Advertisement

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 30 உயர்ந்து ரூ.7,180க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 57,440க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7260க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.100க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.100,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : உங்க கிட்ட இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? இனி தபால் நிலையத்திலும் மாற்றிக் கொள்ளலாம்..!! – ரிசர்வ் வங்கி

Tags :
Advertisement