Gold Rate Today | மீண்டும் உயருகிறதா தங்கம் விலை? நகைப் பிரியர்கள் ஷாக்!! இன்றைய நிலவரம் என்ன?
பட்ஜெட்க்கு பிறகு தங்கத்தின் விலை 5 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது.
இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. மேலும், தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இத்தகைய சூழலில் பட்ஜெட்க்கு பிறகு தங்கத்தின் விலை 5 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. இதனால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து 5 நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் விலை இன்று மாற்றம் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.51,720-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.6,465-க்கு விற்பனையானது. இன்றைய (ஜூலை 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. சவரன் ரூ.51,720-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,465-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,920-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,360-ஆக விற்பனையாகிறது.
Read more ; ”ஜம்மு காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்”..!! அமெரிக்கா விடுத்த பரபரப்பு எச்சரிக்கை..!!