ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் விலை எவ்வளவு..?
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 2ஆம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும், 3ஆம் தேதி சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், 4ஆம் தேதி விலையில் எந்த மாற்றமின்றியும், நேற்றைய தினம் டிசம்பர் 5ஆம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்தும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனையாகிறது. அந்த வகையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,115-க்கும், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 56,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read More : சிறு வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன்..!! அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு..!!