தங்கம் விலை இன்றும் கிடுகிடு உயர்வு.. எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..
இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் புத்தாண்டு தினமான நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200 என்று விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 30 உயர்ந்து ரூ.7,180க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 57,440க்கும் விற்பனையாகிறது.
அதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.99க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : பாதியாக குறைந்த காய்கறிகள் விலை.. இல்லத்தரசிகள் செக குஷி..!! இன்றைய விலைப்பட்டியல் இதோ!