தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதுதான்..!
சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.57,040க்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
நேற்றைய தினம்(டிசம்பர் 3) ஆபரணத் தங்கத்தின் மீதான விலை சற்று உயர்ந்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,130-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் மீதான விலையில் எந்த மாற்றமுமின்றி காணப்படுகிறது.
அதன் படி இன்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் மீதான விலை ஒரு கிராம் ரூ.7,130-க்கும், ஒரு சவரன் ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளி விலையிலும் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read More: பெட்டகங்களை திறந்தால் பேரழிவு ஏற்படும்.. இந்தியாவின் இந்த மர்மமான கோயில்கள் பற்றி தெரியுமா?