For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யாருக்கெல்லாம் ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகை கிடைக்கும்..? விவசாய நிலங்கள், கால்நடைகளுக்கு எவ்வளவு..?

Chief Minister M.K. Stalin has ordered compensation for shanty houses, agricultural crops and livestock affected by Cyclone Fenchal.
08:40 AM Dec 04, 2024 IST | Chella
யாருக்கெல்லாம் ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகை கிடைக்கும்    விவசாய நிலங்கள்  கால்நடைகளுக்கு எவ்வளவு
Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், விவசாயப் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகைகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.

* அதன்படி, ஃபெஞ்சல் புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

* சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.

* முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட முன்னுரிமை வழங்கப்படும்.

* மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் தலா ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.

* நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.

* பல்லாண்டு பயிர்கள், மரங்கள் சேதமடைந்தால் ஹெக்டேருக்கு ரூ.22,500 வழங்கப்படும்.

* மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 நிவாரணம் வழங்கப்படும்.

* எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும்.

* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு ரூ.4,000, கோழி இறப்புக்கு ரூ.100 வழங்கப்படும்.

* வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகள் சிறப்பு முகாம் மூலம் வழங்கப்படும்.

* வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாணவர்களுக்கு புதிய நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும், நிவாரணம் வழங்குவது தொடர்பாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More : Egg Price | நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement