புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!! மீண்டும் குறையுமா..? முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா..?
சென்னையில் இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ள நிலையில், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டில் கடந்த ஜூலை மாதம் வரை தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதையடுத்து, நகை மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கணிசமாகக் குறைத்தது. இதன் காரணமாக அன்றைய தினமே தங்கம் சவரனுக்கு ரூ.2,200 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு தங்கத்தின் விலை குறைந்து சவரன் ரூ.51 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையானது.
என்னதான் வரியை குறைத்தாலும் நகையின் விலை கட்டுப்படுவதாக தெரிவதில்லை. ஆகஸ்ட் மாத இறுதியில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் 24ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்தைத் தொட்டது. விலை ஏற்றத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று (அக்.3) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,880-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு அரசு நகை மீதான வரியை குறைத்தாலும் அதன் பலன் சில காலத்திற்கு தான் என்றும் தங்கம் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் விலை ஏற்றத்தைக் கண்டு அச்சப்பட தேவையில்லை. தங்கம் மீது முதலீடு செய்பவர்கள் ஓடுகின்ற குதிரையின் மீது பந்தயம் கட்டுவது போன்றது. உங்களது முதலீட்டின் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே தான் இருக்கும். உங்களால் மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்ய முடியவில்லை என்றால், ஒவ்வொரு மாதமும் முடிந்த தொகையை தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Read More : திரைப்படத்தில் அந்தரங்க காட்சி..!! நடிகர்களின் உணர்வுகள் இப்படித்தான் இருக்கும்..!! தமன்னா ஓபன் டாக்..!!