ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..? நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்றைய தினம் தங்கம் விலை மீண்டும் இறங்கியுள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 45 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 360 ரூபாயும் இறங்கியுள்ளதை அடுத்து சென்னை விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315 என விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.58,520 என விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7,825 எனவும், ஒரு சவரன் ரூ.62,600 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல், சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.107 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 1,07,000 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read More : சூப்பர் வேலை..!! மாதந்தோறும் லட்சத்தில் சம்பாதிக்கலாம்..!! விண்ணப்பிக்க நவ.8ஆம் தேதியே கடைசி..!!