3 நாட்களில் ரூ.3,040 வரை குறைந்த தங்கம் விலை..!! நகைக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்..!!
தங்கத்தின் விலை 3-வது நாளாக மீண்டும் அதிரடியாக குறைந்து சவரன் ரூ.51,440-க்கு கீழ் சென்றது. இதனால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. மேலும், தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இத்தகைய சூழலில் தற்போது தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக கிடுகிடுவென சரிய தொடங்கி உள்ளது.
நேற்று முன்தினம் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பும் தான் இதற்கு காரணம். தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, அன்றயை தினம் தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.6,550க்கும், சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400க்கும் விற்பனையானது.
இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கும் விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து, ரூ.6,490க்கு விற்பனை ஆனது. அதே போல் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கும், ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ. 6,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ரூ.3,040 வரை தங்கம் குறைந்துள்ளது. சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகைக்கடைகளில் தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது.
Read More : மின்வாரிய ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!