ஷாப்பிங் போறீங்களா?… தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீர்கள்!… மொத்த பணமும் போயிடும்!
இந்தியாவில் தற்போது, நேரடியாகக் கடைக்குச் சென்று வாங்குவது முதல் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது வரை பல்வேறு முறைகளில் தங்களுக்குப் பிடித்த ஆடை, நகை, எலெக்ட்ரானிக் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களை வாங்குகின்றனர். இதற்காக வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில், ஹேக்கர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர்.
உண்மையில் இதுபோன்ற மோசடிகள் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. அதுவும் தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் மோசடிகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதிக சலுகை கிடைக்கிறது என்ற ஆசையில் மோசடிக்கு ஈர்க்கப்பட்டு, இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள். தங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் இழந்துவிடுகிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக முன்பின் தெரியாத லிங்க்குகளை கிளிக் செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த லிங்க்குகளை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போனை அவர்கள் ஹேக் செய்துவிடுவார்கள். உங்களுடைய அனைத்து தரவுகளும் திருடப்பட்டுவிடும். எனவே, ஷாப்பிங் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும், கடன் வாங்க வேண்டும், சொத்து வாங்க வேண்டும், லாட்டரியில் வெற்றி பெற்றீர்கள் போன்ற செய்திகள் உங்களுக்க் வரும். நிறைய கூப்பன்களும் வரும். அதற்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று கூறப்பட்டிருக்கும். நீங்கள் அதை கிளிக் செய்தவுடன், உங்கள் தொலைபேசியில் வைரஸ் நுழைந்துவிடும். அந்த வைரஸ் ஹேக்கர்களுக்கு எல்லா தகவல்களையும் அனுப்பி வைக்கிறது.
உங்கள் கடவுச்சொற்கள், OTP, அழைப்பு விவரங்கள், செய்திகள், அழைப்பு பதிவுகள் மற்றும் பல தகவல்கள் திருடப்படும். இது உங்கள் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் மட்டுமல்ல, உங்கள் வங்கிக் கணக்கிற்கும் ஆபத்து விளைவிக்கும். எனவே, பேராசையால் இதுபோன்ற வலைகலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எந்த இணைப்பை தெரியாமல் கிளிக் செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.