முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடுரோட்டில் அண்ணாமலை புகைப்படத்தோடு ஆடு பலி..!! அதிர்ச்சி வீடியோ..!!

A photo of Annamalai was stuck on the neck of a goat in the middle of the road and it was beheaded.
04:14 PM Jun 06, 2024 IST | Chella
Advertisement

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான், நடுரோட்டில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் போட்டோவை மாட்டி தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவியது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி நிலவியது. இதில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் கூட வெற்றி பெறவில்லை.

குறிப்பாக, அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அண்ணாமலையின் தோல்வியை திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். தேர்தல் ரிசல்ட் வெளியான நாளில் கோவையில் திமுகவினர் மட்டன் பிரியாணி வழங்கினர். அண்ணாமலை தனது பேட்டிகளில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், ஆடு வளர்ப்பதாகவும் அடிக்கடி கூறுவார். இதனால் அண்ணாமலையை திமுகவினர் ஆடு என வலைதளங்களில் விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் அண்ணாமலையை தோல்வியை மட்டன் பிரியாணி வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

இத்தகைய சூழலில் தான் தற்போது இணையதளங்களில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் வகையில், அவரது போட்டோவுடன் நடுரோட்டில் ஆடு வெட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆட்டின் கழுத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் போட்டோ நூலில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. அதனை ஒருவர் அரிவாள் கொண்டு வெட்டுகிறார். தலை வேறு உடல் வேறு என ஆடு 2 துண்டாக ரத்தம் ரோட்டில் பாய்கிறது. இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.

Read More : அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி..!! தமிழக பாஜக தலைவராகிறார் வானதி சீனிவாசன்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Tags :
annamalaikovailoksabha election
Advertisement
Next Article