For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே நாளில் லட்சத்தில் வருமானம்!! ஆடுகளை வைத்து இப்படியும் சம்பாதிக்கலாமா?

Goat dung is commonly used as fertilizer in agricultural fields. But millions can be made from those goat poops.
04:51 PM Jun 27, 2024 IST | Mari Thangam
ஒரே நாளில் லட்சத்தில் வருமானம்   ஆடுகளை வைத்து இப்படியும் சம்பாதிக்கலாமா
Advertisement

ஆட்டு புழுக்கைகள் விளைநிலங்களில் உரங்களாக பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், அந்த ஆட்டுப் புழுக்கைகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். ஆம், ஒரு நாட்டில் ஆட்டு புழுக்கைகளின் மதிப்பு மிக அதிகம். இதுகுறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

Advertisement

ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், ஒரு குறிப்பிட்ட மரத்தில் ஏறும் ஆடுகள், அதில் உள்ள பழங்களை ஆர்முடன் சாப்பிடுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களும் அந்த மரங்களில் ஆடுகள் ஏறுவதை தடுக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்த பழங்களை ஆடுகள் சாப்பிட்ட பிறகு, அவற்றின் புழுக்கைகளின் மதிப்பு பல லட்சத்தை எட்டும். ஆர்கான் மரங்களில் உள்ள பழங்களை தான் ஆடுகள் சாப்பிடுகின்றன. அந்த பழங்களின் விதைகளை ஜீரணமாகாமல் அப்படியே வெளியேற்றுவதால், இதன் மூலம் ஆடுகளின் உரிமையாளர்கள் அதிகளவில் பணம் சம்பாதிக்கின்றனர். இந்த ஆட்டுப் புழுக்கைகளை சேகரித்து, அதிலிருந்து ஆர்கான் விதைகளை மட்டும் தனியாக பிரிக்கின்றனர்.

பின்னர், அந்த விதைகளுக்குள் இருக்கும் காய்களை எடுத்து அவற்றை வறுத்து, அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கின்றனர். இந்த எண்ணெய் ஆர்கான் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்ய இந்த எண்ணெய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு லிட்டர் ஆர்கான் எண்ணெய் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை விற்கப்படுகிறது. எனவே, தான் இந்த நாட்டின் ஆட்டுப் புழுக்கைகளுக்கு மதிப்பு அதிகம்.

Read more; ஆத்தி பார்க்கவே ரண கொடூரமா இருக்கே!! இந்த மீனை மட்டும் தொட்றாதீங்க.. உயிருக்கே ஆபத்து!!

Tags :
Advertisement