’உடனே ஸ்பாட்டுக்கு போங்க’..!! அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவுபோட்ட முதல்வர்..!!
தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அனைத்து இடங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ள நிலையில், தற்போது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
குறிப்பாக நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, கனமழையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.