முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2023 நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியல்: 'Tech Hub' பெங்களூரு 6-வது இடம்; டாம் டாம் அறிக்கை.!

12:35 PM Feb 03, 2024 IST | 1newsnationuser7
Advertisement

இந்தியாவின் முதன்மையான தொழில் நகரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் பெங்களூரு உலக அளவில் அதிக நெரிசலான நகரங்களின் பட்டியலில் 6-ஆம் இடம் பெற்றிருப்பதாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லொகேஷன் டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் 'டாம் டாம்' என்பவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் பெங்களூரு நகரம் அதிக நெரிசலான நகரங்களின் பட்டியலில் உலக அளவில் 6-வது இடத்தை பெற்று இருக்கிறது. இந்தப் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு பெங்களூரு 2-வது இடத்தை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் வெளியிட்ட தகவலின் படி 2023 ஆம் ஆண்டில் பெங்களூரு நகரில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 28 நிமிடங்களும் 10 வினாடிகளும் தேவைப்படுகிறது. இது 2022ஆம் வருடத்தை விட போக்குவரத்து நெரிசல் சற்று முன்னேறி இருப்பதாக தெரிவித்துள்ளார். 2022 ஆம் வருடம் 10 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 29 நிமிடங்கள் தேவைப்பட்டுள்ளது..

2023 ஆம் ஆண்டில் நெரிசல் மிக்க பரபரப்பான வேலை நேரங்களில் 18 கிலோமீட்டர் வாகன ஓட்டிகளின் சராசரி வேகமாக இருந்திருக்கிறது. இதனால் கடந்த ஆண்டில் போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு வாசிகள் 132 மணி நேரத்தை இழந்துள்ளனர். மேலும் உலக அளவில் அதிகம் மிக்க நகரங்களில் லண்டன் முதலிடத்திலும் டப்ப்லின் நகரம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. கனடாவின் டொரன்டோ மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் இத்தாலியின் மிலன் நகரம் நான்காம் இடம் வகிக்கிறது .

Tags :
6th PlaceBengaluruCongested CitiesTrafic
Advertisement
Next Article