For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’நடிகையுடன் நெருக்கமாக நடிக்கும் ஜிவி’..!! ’நான் சொன்ன எதையும் அவரு கேட்கல’..!! சைந்தவி ஓபன் டாக்..!!

01:33 PM May 17, 2024 IST | Chella
’நடிகையுடன் நெருக்கமாக நடிக்கும் ஜிவி’     ’நான் சொன்ன எதையும் அவரு கேட்கல’     சைந்தவி ஓபன் டாக்
Advertisement

சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனி சேர்ந்து வாழப் போவதில்லை என்றும் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்திருந்தனர். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சைந்தவி கொடுத்த பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

அந்த பேட்டியில், ஜிவி பிரகாஷ் படத்தில் இவ்ளோ நெருக்கமாக நடிக்கிறார் அதை பார்க்கும் போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டிருப்பார். இதற்கு பதில் அளித்த சைந்தவி, "ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிக்க போறேன் என்று சொன்னதுமே நிறைய கண்டிஷன் போட்டேன். ஆனால், அவர் எதையும் பின்பற்றவில்லை. டார்லிங் படத்தில் நெருக்கமாக நடித்திருந்தார்.

எனக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் படத்தை பார்த்து நிறைய பேர் சந்தோசம் அடைந்தனர். சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் எல்லாருக்கும் கல்யாணம் ஆகியுள்ளது. மனைவியும் இருப்பார்கள். அவங்களும் வீட்டுலையும் பார்ப்பார்கள். அவர்களுக்கும் இப்படி தான் இருக்கும் போல என்று நினைத்தேன். இப்போ எல்லாமே பழகிவிட்டது” என்று சைந்தவி கூறியிருக்கிறார்.

Read More : வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா..?

Advertisement