For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திருமண செலவு 800 கோடியா?  வரலக்ஷ்மி திருமணத்திற்கு இத்தனை கோடி செலவு செய்தாரா சரத்குமார்?

Actor Sarathkumar Vikravandi has given an explanation in the by-election campaign regarding the information published on YouTube about his daughter's wedding expenses.
05:29 PM Jul 08, 2024 IST | Mari Thangam
திருமண செலவு 800 கோடியா   வரலக்ஷ்மி திருமணத்திற்கு இத்தனை கோடி செலவு செய்தாரா சரத்குமார்
Advertisement

Varalaxmi Nicholai Wedding Expenses: மகள் திருமண செலவு குறித்து, யூடியூப் தளங்களில் வெளியாகும் தகவலுக்கு, நடிகர் சரத்குமார் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தியாவில் மெஹந்தி, சங்கீத் விழாக்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அதன் பின் சென்னையில் நடத்தப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மி திருமணத்திற்கு ஆன செலவு பற்றி நடிகர் சரத்குமார் (Sarathkumar) விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார். அதன்படி பலர் வரலக்ஷ்மி திருமணதிற்கு 800 கோடி செலவு செய்ததாக செய்திகள் போடுகின்றனர், ஆனால் 800 கோடி எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை எனக் கூறியிருந்தார். இதனால் பலர் உண்மையில் இவ்வளவு பிரம்மாண்ட திருமண விழாவிற்கு எவ்வளவு தான் செலவாகி இருக்கும் என்று பேசி வருகின்றனர்.

மேலும், எனக்கு 35 வயதாகிறது, சாரி வயசை தப்பா சொல்லிட்டேன், இப்போதும் நான் திடமாக இருக்க சுத்தமான பழக்க வழக்கங்கள் தான் காரணம். ஆனால் தற்போதைய இளம் தலைமுறையினர் போதை, மது, கஞ்சாவுக்கு அடிமையாக விட்டிருக்கிறது இந்த அரசு என பிரச்சாரத்தில் சரத்குமார் பேசி இருக்கிறார்.

Tags :
Advertisement