அத்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி..!! காரில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த ஓட்டுநர்கள்..!! சென்னையில் ஷாக்..!!
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அவருக்கு பெற்றோர் இல்லை. இதற்கிடையே, சிறுமியை அவரது அத்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, பதறிப்போன சிறுமியின் அத்தை நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை வலைவீசி தேடியுள்ளனர்.
அப்போது, சிறுமி பம்மலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். அதாவது, வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமி, சாலையோரம் நின்று கொண்டிருந்த கால்டாக்சி ஓட்டுனரிடம் உதவிக் கேட்டுள்ளார். அவர், கடலூரை சேர்ந்த பாக்கியராஜ் (38). இவர், சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
பின்னர், தனது நண்பரும், மற்றொரு ஓட்டுனருமான பரமசிவனுக்கு போன் செய்து அழைத்துள்ளார். இதையடுத்து, சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற இருவரும் சிறுமிக்கு வேலை வாங்கித் தராமல், காரிலே அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மீண்டும் பம்மலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை வாக்குமூலமாக போலீசாரிடம் சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர்கள் பாக்கியராஜ் மற்றும் பரமசிவன் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்து, போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Read More : லண்டனில் ரகசியமாக அண்ணாமலையை சந்தித்த விஜய்..? அடுத்த நிமிடமே பாஜகவினருக்கு பறந்த உத்தரவு..!!