Gold Rate | தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடி உயர்வு..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, தீபாவளி பண்டிகையின்போது ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறங்களை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.55,560-க்கு விற்பனையானது. இதேபோல் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.55,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய தினம், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.55,960-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றைய தினம் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,520-க்கு விற்பனையாகிறது. இதேபோல், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ.2 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
Read More : லண்டனில் ரகசியமாக அண்ணாமலையை சந்தித்த விஜய்..? அடுத்த நிமிடமே பாஜகவினருக்கு பறந்த உத்தரவு..!!