For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”பேய் மழை.. உடைந்தது அணை”..!! ஊருக்குள் புகுந்த தண்ணீரால் 120-க்கும் மேற்பட்டோர் பலி..!! கென்யாவில் சோகம்..!!

07:41 AM Apr 30, 2024 IST | Chella
”பேய் மழை   உடைந்தது அணை”     ஊருக்குள் புகுந்த தண்ணீரால் 120 க்கும் மேற்பட்டோர் பலி     கென்யாவில் சோகம்
Advertisement

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. வெள்ளம் நீர் சூழ்ந்து குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால், கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.

Advertisement

இதற்கிடையே, கென்யாவில் உள்ள மிகப் பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்தது. தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கூறப்படுகிறது.

வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 109 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமான 49 பேரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பார்க்கும் இடம் எல்லாம் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.

Read More : நவோதயா வித்யாலயா பள்ளிகளில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கு மேல்..!!

Advertisement