பிரிட்டனின் ASOS உடன் பார்ட்னர்ஷிப் அமைக்கும் ரிலையன்ஸ்!
சில்லறை வர்த்தகத்தில் உலகத் தரம் வாய்ந்த ஃபேஷன் ஆடைகள் மற்றும் பயன்பாட்டு பொருட்களை இந்தியர்களுக்கு வழங்கும் முயற்சியாக இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ், பிரிட்டனின் ASOS நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ASOS நிறுவனம் 900 உலகளாவிய மற்றும் உள்ளூர் பிராண்டுகளின் ஆயிரக்கணக்கான தயாரிப்புகளின் தொகுக்கப்பட்ட திருத்தத்தையும், அதன் பயன்பாடு மற்றும் இணையதளம் வழியாக 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் ஃபேஷன் தலைமையிலான சொந்த பிராண்ட் லேபிள்களையும் வழங்குகிறது.
தற்போது ரிலையன்ஸ் அந்த நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் ASOS இன் பொருட்களை இந்தியாவில் நேரடியாக கடைகளிலும், ஆன்லைன் தளத்திலும் விற்பனை செய்யப்படும். ரிலையன்ஸ் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் மூலமாக உலகின் முன்னணி ஃபேஷன் நிறுவனங்களுடைய பொருட்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தில் மிக எளிதாக கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதுகுறித்து ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் இயக்குனர் இஷா அம்பானி கூறுகையில், எங்களுடைய ஃபேஷன் குடும்பத்திற்கு ASOS நிறுவனத்தை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உலகத் தரம் வாய்ந்த, குளோபல் ட்ரெண்ட் பொருட்கள் இந்திய சந்தையில் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. அந்த பயணத்தில் மிக முக்கியமான பிரிட்டனின் ASOS நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் அமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பார்ட்னர்ஷிப் இந்திய ஃபேஷன் சில்லறை வர்த்தகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச ஃபேஷன் தரமாக விரைவாக கிடைப்பதை இந்த பார்ட்னர்ஷிப் உறுதி செய்யும் என்று கூறியள்ளார்.
ASOS நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜோஸ் அன்டோனியோ ராமோஸ் கூறியதாவது- உலகம் முழுவதும் உள்ள ஃபேஷன் ஆர்வலர்களுக்கு, தரமான ட்ரெண்டான பொருட்கள் விரைந்து கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் எங்களுடைய ப்ராண்ட் இன்னும் பல பகுதிகளில் ரீச் ஆகும். என்று தெரிவித்துள்ளார்.
‘அதானி கைக்கு வந்தது எஸ்ஸார் டிரான்ஸ்கோ..!!’ நெக்ஸ்ட் பிளான் என்ன?