வந்துவிட்டது இன்ஸ்டன்ட் பீர் தூள்..!! தண்ணீரை சேர்த்தால் போதும் இரண்டு நிமிடத்தில் ரெடி..
உலகின் முதல் பீர் தூளை Klosterbrauerei Neuzelle எனும் ஜெர்மன் மதுபான ஆலை நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கிழக்கு ஜெர்மனியை தளமாக கொண்ட Klosterbrauerei Neuzelle எனும் மதுபான ஆலை சாதாரண தண்ணீரை நிமிடங்களில் பீராக மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளது. அதாவது இன்ஸ்டண்ட் காபி தூள் போல இன்ஸ்டண்ட் பீர் தூளை தயாரித்துள்ளது. இதன்மூலம், பீர் ஏற்றுமதிக்கான பயணத்தில் ஏற்படும் அதிக கார்பன் வெளியீட்டை குறைக்க முடியும் என நம்புவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு கிளாஸில் பீர் பொடியைப் போட்டு, தண்ணீர் சேர்த்து கலக்கினால் போதும் உண்மையான பீரை போலவே இந்த தண்ணீர் பீர் ரெடி ஆகிவிடும்.
தூள் பீர் அதன் வளர்ச்சியின் கடைசி கட்டத்தில் உள்ளது. இப்போதைக்கு இது ஆல்கஹால் இல்லாதது என்பது குறிப்பித்தக்கது. இந்த பீர் பவுடர் புழக்கத்திற்கு வந்தால், தண்ணீர், போத்தல்கள் போன்ற பல பொருட்கள் தேவைப்படாமல் போகலாம், மேலும் எடை குறையும் என்பதால் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும். இது, ஜெர்மனிக்கு மட்டும் CO2 உமிழ்வில் 3 முதல் 5 சதவீதத்தை சேமிக்க முடியும் என்று அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
Read more ; உஷார்!. காண்டாக்ட் லென்ஸ்களால் பறிபோன பார்வை!. சிம்பு பட நடிகையின் அதிர்ச்சி பதிவு!