10,11 & 12-ம் வகுப்பு மாணவர்களே ரெடி...! இன்று காலை 9.30 மணிக்கு பொது தேர்வு அட்டவணை...!
தமிழ்நாடு மாநிலக் பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அட்டவணையை வெளியிட உள்ளார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 2023 - 2024-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் இன்று 16.11.2023 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதால் இதனை கருத்தில் கொண்டு பொது தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பாக மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களும் முடிக்கப்பட்டு, பொது தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.