கோவையில் பரபரப்பு...! ஜிடி நாயுடு பெயர் பலகைக்கு கருப்பு மை பூசி அழித்த திமுக நிர்வாகி...!
கோவையை அடுத்த சூலூர் அருகே கலங்கல் என்ற இடத்தில் கடந்த 1893-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டமில்லாதவராக இருந்த அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற அவர் அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு என தொழில்நுட்ப உலகிற்கு முன்னோடியாக இருந்ததான். அரசு சார்பில் அவரது நினைவாக அவரின் பெயர் சாலைக்கு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுகவை சேர்ந்த நிர்வாகி ரகுநந்தன் என்பவர் ஜிடி நாயுடு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அரசு சார்பில் அவரது நினைவாக அவரின் பெயர் வைக்கப்பட்ட சாலையின் பெயர் பலகைக்கு கருப்பு மை பூசி அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்; தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகள் ஒருவரான நமது கோவை பகுதியைச் சார்ந்த ஜி.டி.நாயுடு அவர்களின் திறமையான ஆற்றலுக்கு இலக்கு ஏற்படும் விதமாக திமுகவை சேர்ந்த நிர்வாகி ரகுநந்தன் என்பவர் ஜிடி நாயுடு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அரசு சார்பில் அவரது நினைவாக அவரின் பெயர் வைக்கப்பட்ட சாலைக்கு கருப்பு மை பூசி உள்ளார். அறிவியல் விஞ்ஞானி கோவைக்கு பெருமை சேர்த்த அவருக்கே இந்த நிலைமை என்றால் இந்த விடியா திமுக அரசால் மக்களின் நிலைமை என்ன என பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.