For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஒரே நாளில்.. 50 ரூ விலையேற்றமா."? விண்ணை தொட்ட பூண்டின் விலை..! மக்கள் அவதி.!

11:43 AM Feb 04, 2024 IST | 1newsnationuser4
 ஒரே நாளில்   50 ரூ விலையேற்றமா    விண்ணை தொட்ட பூண்டின் விலை    மக்கள் அவதி
Advertisement

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அனைவரும் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் முக்கியமான ஒன்று பூண்டு. அதுவும் தமிழ்நாட்டில் பூண்டு இல்லாமல் ஒரு சமையலறை இல்லை என்று சொல்லலாம்.சென்னை கோயம்பேடு சந்தையில், பூண்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Advertisement

குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து பூண்டு வருகிறது. ஆனால் விளைச்சல் குறைவினால் பூண்டு வரத்து 70 சதவீதம் குறைந்திருக்கிறது. இதனால் கடும் விலையேற்றத்தை பூண்டு கண்டிருக்கிறது.

இவ்வாறு பூண்டின் விலையேற்றத்திற்கு காரணம் பருவநிலை மாற்றம் தான். பருவநிலை மாற்றத்தால் பூண்டின் விளைச்சல் குறைந்திருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் மக்கள் பூண்டு வாங்குவதையே நிறுத்தக் கூடும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.

Tags :
Advertisement