For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குஜராத்தின் பாரம்பரிய நடனமான 'கர்பா'- க்கு யுனெஸ்கோ அங்கீகாரம்!

07:21 AM Dec 07, 2023 IST | 1newsnationuser3
குஜராத்தின் பாரம்பரிய நடனமான  கர்பா   க்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
Advertisement

குஜராத்தின் பாரம்பரிய நடமான 'கர்பா' நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் பெருவாரியான மக்கள் சரஸ்வதி பூஜை, நவராத்திரி , தீபாவளி , விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்களை ஒருமித்தே கொண்டாடுகின்றனர். குறிப்பாக நவராத்திரி என்பது வட இந்தியாவில்தான் மிகவும் பிரபலம். 9 நாட்கள் 9 தேவிகள் என நடத்தப்படும் பூஜையின் ஒவ்வொரு நாள் இரவு பொதுமக்கள் ஒன்றுக்கூடி கொண்டாடுவார்கள். இந்த 9 நாட்களில் துர்க்கா தேவியை மையமாக வைத்து, ஒன்பது சக்தி வடிவ தெய்வங்களை பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். பாடல்களுடன் பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஒன்றுக் கூடி கர்பா நடனம் ஆடி மகிழ்வார்கள். பெரிய திடல்களில் குழுவாக இணைந்து கலாச்சார ஆடை அணிந்து கர்பா நடனம் ஆடுவார்கள். திடல்கள் மட்டுமின்றி, தெருக்கள், கோயில்களிலும் கர்பா நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும். இந்த நடன ஆர்பரியத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் குவிகின்றனர். வட மாநிலங்களில் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் முக்கியமாக, குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது. இப்படி, குஜாரத்தின் பாரம்பரிய நடமான 'கர்பா' கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் யுனெஸ்கோ உலகளவில் உள்ள கலாசார மரபு மற்றும் கலைகளை ஆராய்ந்து கலாசார பாரம்பரிய பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான பட்டியல் வெளியீட்டின் 18வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 'கர்பா’ நடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,குஜராத்தின் பாரம்பரியமான 'கர்பா' நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது, "கர்பா என்பது வாழ்க்கை, ஒற்றுமை மற்றும் நமது ஆழமான வேரூன்றிய மரபுகளின் கொண்டாட்டமாகும். இது பாரம்பரியப் பட்டியலில் இணைத்தது இந்திய கலாச்சாரத்தின் அழகை உலகுக்குக் காட்டுகிறது. கர்பா நடனத்திற்கு உலக அங்கீகாரம் பெற்றது, வருங்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உணர்த்தப்படுகிறது. கர்பா நடனம் உலகளாவிய அங்கீகார பெற்றதற்கு வாழ்த்துக்கள்” என்றார்.

இதேபோல், மத்திய மத்திய கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் கிஷன் ரெட்டி தனது X தளத்தில், நமது செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள அயராத முயற்சிகளுக்கு இந்தப் பட்டியல் சான்றாகும் என்று கூறியுள்ளார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறுகையில், யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் கர்பா இடம் பெற்றுள்ளது குஜராத் மற்றும் நாட்டிற்கு ஒரு பெருமையான தருணம் என்றும், இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்திற்கு உலகம் வழங்கிய மரியாதை என்றும் கூறினார்.

Tags :
Advertisement