முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போதையில் சகோதரியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!! கொலை செய்ததும் அம்பலம்..!!

11:22 AM Dec 05, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் சக்கப்பாட் பகுதியில் கடந்த நவ.6ஆம் தேதி தனது சகோதரி மாயமாகிவிட்டதாக சகோதரன் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வனப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டறிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் பலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கோடாரியால் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, புகார் அளித்த பெண்ணின் சகோதரனின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்ததால், அவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

சகோதரனுக்கும், அவரது அண்ணி முறையிலான பெண் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதைத் தெரிந்து கொண்ட அவரது சகோதரி, இதனை விட்டுவிடுமாறு இளைஞருக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அவர்களது உறவு தொடர்ந்ததால், வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், கடந்த நவம்பர் 3ஆம் தேதி, சகோதரி வனப்பகுதிக்கு பொருட்கள் சேகரிக்க செல்வதை அறிந்து அவரும் மாடுகளை மேய்க்க சென்றுள்ளார்.

பின்னர், தனது நண்பர்கள் 4 பேரை அங்கு வரவழைத்த இளைஞர், அவர்களுக்கு மதுவாங்கி கொடுத்துள்ளார். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து சகோதரியை கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் 3 நாட்கள் கழித்து ஒன்றும் தெரியாதது போல் போலீசில் புகார் அளித்ததோடு, அவர்களுடன் சேர்ந்து சகோதரியை தேடியுள்ளனர். இந்த தகவல்கள் கிடைத்ததை அடுத்து, அந்த இளைஞர் உட்பட 5 பேரையும் கடந்த கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
ஒடிசா மாநிலம்கூட்டு பலாத்காரம்கொலை வழக்குவனப்பகுதி
Advertisement
Next Article