காத்து வாங்கிய தியேட்டர்.. கேம் சேஞ்சர் 3 நாள் வசூல் இவ்வளவு தானா..? என்ன செய்ய போகிறார் ஷங்கர்..?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீ காந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கேம் சேஞ்சர் படம் ரிலீஸான மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்கிற விபரம் வெளியாகியுள்ளது. ராம் சரண் படம் நேற்று இந்தியாவில் மட்டும் ரூ. 17 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ரூ. 450 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் விடுமுறை நாளில் ரூ. 17 கோடி வசூல் செய்திருப்பது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களில் ரூ.100 கோடி கூட வசூல் செய்யவில்லை. அதேசமயம் தெலுங்கில் ரூ.61.75 கோடியும், தமிழில் ரூ.5.02 கோடியும், இந்தியில் ரூ.22.5 கோடியும் வசூலித்துள்ளது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படம் ஓடிய தியேட்டர் காத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஷங்கர் படம் ஓடும் தியேட்டரில் ஆளே இல்லையா என வியக்கிறார்கள் ரசிகர்கள்.