நடிகர் விஜயுடன், தனது தல பொங்கலை கொண்டாடிய கீர்த்தி-ஆண்டனி!!! வைரலாகும் வீடியோ...
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்திருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் படம் ரிலீஸுக்கு முன், தனது 15 ஆண்டுகால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை, கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் இன்று தனது தல பொங்கலை கொண்டாடியுள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக மட்டும் இல்லாமல் கட்சி தலைவராகவும் இருப்பவர் தான் விஜய். இவரது மேலாளரான ஜெகதீஸ் the route என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நீலாங்கரையில் நடத்தி வருகிறார்.
அந்த வகையில், The Route நிறுவனத்தில் இருக்கும் நடிகர் விஜய், ஜெகதீஷ், கல்யாணி பிரியதர்ஷன், கதீர், மமிதா பைஜு, சஞ்சனா உள்ளிட்டவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்யுடன் சேர்ந்து தனது தல பொங்கலை கொண்டாடியுள்ளார். இந்நிலையில், the route நிறுவனம் கொண்டாடிய பொங்கல் விழாவின் வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது டிரென்ட் ஆகி வருகிறது.
Read more: போதைக்கு அடிமையான நடிகை; காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்குமார்.. யார் அந்த முன்னாள் காதலி?