சட்டவிரோதமாக 8 நாடுகளில் இருந்து ஆம் ஆத்மிக்கு வரும் நிதியுதவி!… ED அறிக்கை!
ED - AAP: 2014 முதல் 2022 வரை ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் ரூ.7.08 கோடி வெளிநாட்டு நிதி கிடைத்ததாக அமலாக்கத்துறை (ED) உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மியின் பல்வேறு தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்தது. குறிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட மார்ச் மாதம் கைதானார். சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், அவருக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது இருந்தது.
இந்தநிலையில், சட்டவிரோதமாக ஆம் ஆத்மி கட்சிக்கு நிதியுதவி வருவதாக உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ள அறிக்கையில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஓமன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் ரூ. 7.08 கோடி ஆம் ஆத்மி நன்கொடை பெற்றதுள்ளதாக அமால்கக துறை தெரிவித்துள்ளது மே 25ஆம் தேதி டெல்லியில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது இந்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
அதாவது, இதன்மூலம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA), மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (RPA), மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றை மீறி சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி மீதான கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக நன்கொடையாளர்களின் உண்மையான அடையாளங்களை ஆம் ஆத்மி மறைத்துவிட்டதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் ஐடிபிஐ வங்கிக் கணக்கு மற்றும் எம்எல்ஏ துர்கேஷ் பதக் உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் கணக்குகளில் நேரடியாக நிதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்கேஷ் பதக் கடந்த 2016-ம் ஆண்டு கனடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதி சேகரித்து அந்த பணத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. ஒரே பாஸ்போர்ட் எண்கள், கிரெடிட் கார்டுகள், மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றிலிருந்து பல நன்கொடைகள் அடையாளம் காணப்பட்டன, இது சட்டக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளைக் குறிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்ட பஞ்சாப் மாநிலம் ஃபசில்காவில் நடந்த கடத்தல் வழக்கு விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏ சுக்பால் சிங் கைராவுடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆம் ஆத்மியின் வெளிநாட்டு நிதி விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி முழுமையாக மறுத்துள்ளது. இது மக்களவைத் தேர்தலின் போது கெஜ்ரிவால் அரசாங்கத்தை இழிவுபடுத்தும் நோக்கில் பாஜகவின் புதிய சதி" என்று ஆம் ஆத்மியினர் தெரிவித்துவருகின்றனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மியின் அதிஷி, எங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் திட்டமிட்டு மேற்கொள்ளும் முயற்சியாகும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.
Readmore: இந்தோனேஷியாவில் தடம்பதிக்கும், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை!