குவாரி உரிமையாளருடன் உல்லாசம்..!! 48 மணி நேர வீடியோவை கணவருக்கு அனுப்பி வைத்த பெண்..!! கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு மேல்பம்மம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில், இளம்பெண்னின் உறவினர் பிரான்சிஸ் (46) நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரியில் அந்த இளம்பெண் வேலை பார்த்து வந்த நிலையில், இவருக்கும் பிரான்சிஸுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
பிரான்சிஸ் தனது கெஸ்ட் ஹவுசுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும், இதை வீடியோ பதிவும் செய்து வைத்துள்ளார். இதையறியாத இளம்பெண் சகஜமாக பழகியுள்ளார். இந்நிலையில் பிரான்சிசும், இளம்பெண்ணும் புதிய தொழில் தொடங்க முடிவு செய்துள்ளனர். இதற்கு முதலீடாக ரூ.3 லட்சம் பணம், 5 பவுன் நகையை இளம்பெண் பிரான்சிசுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
புதிய தொழில் நன்றாக சென்ற நிலையில், அதில் கிடைத்த வருமானத்தை பிரான்சிஸ் இளம்பெண்ணுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையறிந்த இளம்பெண் தன்னுடைய பணம், நகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் பிரான்சிஸ் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர், ‘நீ எனது குவாரியில் பணிபுரியும் சிராயன்குழியை சேர்ந்த ராபின் (35) என்பவரின் வீட்டுக்கு வா… அங்கு வைத்து பேசிக்கொள்ளலாம்’ என்று அழைத்துள்ளார்.
இதனை நம்பி இளம்பெண்ணும் அங்கு சென்றார். ஆனால், அங்கிருந்த ராபின், நீயும், பிரான்சிசும் உல்லாசமாக இருந்த 48 மணிநேர வீடியோ காட்சிகள் என்னிடம் உள்ளது. எனவே, பிரான்சிசுடன் நீ எப்படி இருந்தாயோ அதேபோல என்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டுமென கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதற்கு மறுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பிரான்சிஸ் மனைவி வனஜகுமாரி (45) என்பவரும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்துள்ளார்.
வனஜகுமாரி தனது கணவர் பிரான்சிசுடன் இளம்பெண் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளிநாட்டில் இருக்கும் பெண்ணின் கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ந்துபோன பெண்ணின் கணவர் உடனே ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து கேட்டு இளம்பெண்ணை அடித்தாராம். கணவருக்கு விஷயம் தெரிந்துவிட்டதால், நொந்துபோன இளம்பெண், சம்பவத்தன்று பிரான்சிஸ், வனஜகுமாரி, ராபின் ஆகியோரை சந்தித்து ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
இதைக்கேட்ட ராபின், நீ என்னுடன் ஒரு முறை உல்லாசமாக இருந்தால் குறைந்தா போய்விடுவாய் எனக்கூறி இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து வந்த இளம்பெண், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து பிரான்சிஸ், வனஜகுமாரி, ராபின் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம்..!! காதலன் கண்முன்னே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!